நாகப்பிரியர்களுக்கு ஆறுதல்! சற்று குறைந்த தங்கம் விலை..!
Newstm Tamil April 26, 2025 05:48 PM

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6 ஆயிரம், ரூ.7 ஆயிரமே ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிராமே இந்த ரூ.10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை கடைசி இரண்டு நாட்களாக குறைந்தது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சவரன் ரூ.72,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.9,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகிறது.

இன்று சென்னையில் 24 காரட் கிராம் தூய தங்கம் ரூ. 9,823 விலைக்கு விற்பனையாகத் துவங்கியுள்ளது. அதேபோல 8 கிராம் தங்கம் இன்று 78,584 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தை போலவே 24 காரட் தங்கத்தின் விலையிலும் மாற்றம் எதுவும் இல்லை.

வெள்ளி விலை தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக எந்த மாற்றமும் இன்றி இருந்த வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராம் 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.