பூந்தமல்லி டூ போரூர் வரை இனி சென்னை மெட்ரோ வரும்.. அதுவும் ஏப்ரல் 28 முதல்!
ET Tamil April 27, 2025 05:48 PM
சென்னை மெட்ரோ 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதன் phase 2 வை உருவாக்க உள்ளது. இதில் பூந்தமல்லி பைபாஸ் முதல் போரூர் சந்திப்பு வரை சுமார் 12.9 கிமீ மெட்ரோ ரயில் பாதை கட்டப்படுகிறது. இப்பாதையில் மெட்ரோ ரயில் மேலே (viaduct) செல்லும் மாதிரிதான் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நாளை ஏப்ரல் 28, 2025 அன்று சென்னை மெட்ரோ தொடங்கவுள்ளது,அரசு திட்டமிட்டது போல 2025 ஆம் ஆண்டிற்குள் இந்த பகுதிக்கு மெட்ரோ சேவை தொடங்கப்படும் எனக் கூறியுள்ளது. இப்பொழுது ரயில் ஓடும் பாதையின்மேல் பாலம் கட்டும் வேலை முடிந்துள்ளது. பாதையில் ரயிலோடு ஓடும் பாதை ரேல்கள் போடப்பட்டுள்ளது. அதோடு மின் இணைப்பு, சிக்னல் சிஸ்டம் போடுவதும் நடந்து வருகிறது. நடப்பில் எத்தனை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.காரிடார் 3: மாதாவரம் - சோழிங்கநல்லூர்காரிடார் 4: லைட் ஹவுஸ் - பூந்தமல்லி பைபாஸ்காரிடார் 5: மாதாவரம் - சிங்கப்பெருமாள் கோயில்மொத்தம் 118.9 கிமீ நீளமுள்ள மெட்ரோ பாதை உருவாக உள்ளது. இந்த வேலைகள் அனைத்தும் 2026 ஆம ஆண்டிற்குள் முடிக்கப்படும் என அரசு தரப்பில் கூறியுள்ளது.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.