கோவையில் நடைபெறவிருந்த 'இசைஞானி'யின் இசைமழை நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்..!
Newstm Tamil May 12, 2025 11:48 PM

கோவை கொடிசியா மைதானத்தில் மே 18ம் தேதி 'இசைஞானி' இளையராஜாவின் கச்சேரி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அந்த நிகழ்வின் இடம், தேதி ஆகியவற்றை மாற்றினர்.மே 18க்கு பதிலாக மே 17ம் தேதி கோவைப்புதூர் 'ஜி ஸ்கொயர்' 7ஹில்ஸ் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது எனவும், இந்த நிகழ்வில் தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆகி வருகிறது.

இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் மற்றும் வேறு சில காரணங்களுக்காக இந்நிகழ்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கச்சேரி நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கச்சேரி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.