பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கினோம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சக்திவாய்ந்த நமது ஏவுகணைகள் சத்தத்துடன் எதிரி நாட்டு இலக்குகளை அடையும்போது, அவர்களுக்கு அந்த சத்தம் 'பாரத் மாதா கீ ஜெய்' என்றுதான் கேட்கும். பாகிஸ்தானால் நம் ட்ரோன்கள், ஏவுகணைகளை நினைத்து அடுத்த பல நாள்களுக்கு தூங்கவே முடியாது. இந்திய விமானப் படையின் வீரத்தை ஒட்டுமொத்த உலகமே பார்த்தது. பாரத் மாதா கீ ஜெய் என்பது வெறும் முழக்கம் அல்ல, அது ஒவ்வொரு வீரரின் உறுதிமொழி. இந்தியா என்பது புத்தர், குரு கோவிந்த் சிங் ஆகியோரின் பூமி.
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தால் நமக்கே உரிய முறையில் தக்க பதிலடி கொடுக்கப்படும். இரண்டாவது அணு ஆயுத மிரட்டலை இந்தியா சகித்துக்கொள்ளாது. மூன்றாவது, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசையும் பயங்கரவாத மூளைகளையும் பிரித்துப் பார்க்கமாட்டோம். நம்மை உரசிப் பார்த்தால் இனி நடப்பதே வேறு. இன்னொரு தாக்குதல் நடந்தால் சரியான பதிலடி தருவோம். அணு ஆயுதத்தை வைத்து பூச்சாண்டி காட்டுவதெல்லாம் இனி நடக்காது. நமது விமானப்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்களை துல்லியமாக குறிவைத்தது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு தொழில்முறை படையால் மட்டுமே எல்லையைத் தாண்டிய இலக்குகளை வெறும் 20-25 நிமிடங்களில் அழிக்க முடியும். இரவில் பாகிஸ்தானுக்கு சூரியனைக் காட்டினோம். அணுகுண்டு பியூசை பிடுங்கியதும் நமது பலம் எதிரிக்கு புரிந்துவிட்டதுஇரவில் பாகிஸ்தானுக்கு சூரியனைக் காட்டினோம். அணுகுண்டு பியூசை பிடுங்கியதும் நமது பலம் எதிரிக்கு புரிந்துவிட்டது” என்றார்.