திருமணமாகி 5 நாள்தான் ஆகுது..! “மாமியாரை ஏமாற்றிவிட்டு விட்டு காதலனுடன் ஓடிய புதுப் பெண்”.. கணவன் என்ன செஞ்சாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க சும்மா..!!
SeithiSolai Tamil May 14, 2025 04:48 AM

பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது. அதாவது கோஷிலாகுமாரி என்ற பெண்ணுக்கு பிரஜேஷ் ராஜ் பர் என்பவர் கடந்த 7 ஆம் தேதி திருமணமானது. இவர்களுக்கு திருமணம் ஆகி 5 நாட்கள் ஆகும் நிலையில் புதுமணப்பெண் தன் மாமியாரை ஏமாற்றி வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு காதலனுடன் ஓடி விட்டார்.

திருமணத்திற்கு பிறகு புதுமணப்பெண் திடீரென தனியாக வெளியேறுவதை கண்ட கிராம மக்கள் அவரது மாமியார் மற்றும் பிற உற உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்த அந்த பெண்ணையும் அவரது காதலனையும் விசாரணைக்காக அழைத்தனர். அப்போது அந்த மணப்பெண் தன்னுடைய காதலனுடன் தான் செல்வேன் என்று உறுதியாக கூறிவிட்டார்.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் கணவன் பிரமாண பத்திரம் பெற்றுக்கொண்டு காதலனுடன் தன் மனைவியை அனுப்பி வைத்துவிட்டார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.