வைரலாகும் இன்ஸ்டா ... ராஜநாகப் பாம்புக்கு தொப்பி, கரடி காதுகள்!
Dinamaalai May 14, 2025 05:48 AM

பாம்பு என்றால் படையும் நடுங்கும். அப்படியான அதிரவைக்கும் ஆச்சரிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்தோனேசியாவில் பதிவான ஒரு ராஜ நாகப்பாம்பு  வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பாம்பு ஒன்று தனது தலையில் பின்னப்பட்ட தொப்பியுடன் அழகாக போஸ் கொடுப்பது, நெட்டிசன்களை பெரிதும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த வீடியோவை பிரபல இன்ஸ்டாகிராம் பயனரான  ‘SAHABATH ALAM’ பதிவிட்டுள்ளார். இந்தப்பாம்பின் தலையில், கரடி காதுகள் போன்ற அலங்காரங்கள் கொண்ட ஒரு தொப்பி இறுக்கமாக வைக்கப்பட்டுள்ளது.   அருகில் உள்ள ஒருவர் பாம்பின் வாலை நகைச்சுவையாகத் தொட்டு, பின்னர் அதன் தொப்பியில் இருந்த காதுகளை அசைத்துவிடுகிறார்.  

இதனையடுத்து  பாம்பு வேகமான எதிர்வினை காட்டினாலும், இது மக்கள் மனதில் “பயம்” அல்ல, “அழகு” என்ற வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாம்பின் பாவனையான தோற்றம், பொதுவாகவே கொடிய உயிரினம் எனப்படும் நாகத்தின் பிம்பத்தை முற்றிலும் மாற்றிவிட்டது.  
இந்த வீடியோ தற்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் பார்வையாளர்களை பெற்றுள்ளது.  மக்கள், “பாம்பு இல்ல புயல் அழகு”, “பூக்கி நாகம்!”, “இது நாகமா? இல்ல நகைச்சுவை நடிகனா?” என நகைச்சுவையான கருத்துக்களையும், அன்பான பாராட்டுகளையும் பதிவிட்டு  வருகின்றனர். இதுபோன்ற விலங்குகளின் வித்தியாசமான உருவப்படங்கள் சமூக வலைதளங்களில் உயிரினங்களைப் பற்றிய பார்வையை மாற்றும் வகையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.