கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி வந்த நிலையில், காம வெறியில் பெற்ற மகன் என்றும் பார்க்காமல், மகனைக் கொன்று சூட்கேஸிற்குள் அடைத்து அதிர வைத்திருக்கிறார் தாய் ஒருவர்.
கவுஹாத்தியைச் சேர்ந்தவர் பிகாஷ் பர்மன். இவரது மனைவி தீபாலி. இவர்களுக்கு ம்ரின்மாய் என்று 10 வயதில் ஒரு மகன் உள்ளான். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மகனை சேர்த்துள்ளனர். ம்ரின்மாய் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் பள்ளி சென்ற தனது மகனை அதன் பிறகு காணவில்லை என்று கூறி தீபாலி, வீட்டின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தீபாலியின் புகாரைத் தொடர்ந்து போலீசார் சிறுவனை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், சிறுவன் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டு, சூட்கேஸ் ஒன்றினுள் அடைக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டது போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார், தீபாலியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தீபாலியின் பதில்கள் அவர்களுக்கு அடுத்தடுத்து முன்னுக்குப் பின் முரணாக பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போலீசாரின் தொடர் விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபாலி தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்ததும், தீபாலிக்கு ஜியோதிமொய் என்ற காதலன் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
அதன் பின்னர் விஷயத்தை ஒருவாறு யூகித்து தீபாலியை கிடுக்குப்பிடி போட்டு விசாரித்ததில், “கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் தனது காதலனுடனான வாழ்வதற்கு தனது 10 வயது மகன் தொல்லையாக இருப்பான்” என கருதியதால் தீபாலியும், அவரது காதலனும் சேர்ந்து 10 வயது மகனை கொலை செய்து சூட்கேஸிற்குள் அடைத்து வீசியது தெரிய வந்தது. இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து, கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.