“அழகா இருக்கும்னு திமிரு”… இந்த நடிகைக்குத்தான் அது ரொம்ப அதிகம்…. ஓபன் ஆக பேசிய நடிகர் பார்த்திபன்…!!!
SeithiSolai Tamil May 15, 2025 12:48 AM

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி ‘ தி வெர்டிக்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கிருஷ்ணா சங்கர் என்ற இயக்குனர் இயக்கியுள்ளார். இதில் சுஹாசினி, சுருதி ஹரிஹரன், வித்யூலேகா, தயாரிப்பாளர் பிரகாஷ் மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்பட விழாவில் நடிகை சுஹாசினி கலந்துக்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, சிறிய வயதில் உங்கள் படத்தை பார்த்தேன் என்று பலரும் சொல்லும் போதெல்லாம் அவ்வளவு சீனியர் ஆகிட்டோமா? என்ற எண்ணம் தோன்றும். ஆனால் வயதாகிவிட்டதின் சிறப்பு அமெரிக்காவில் இருக்கும் போது தான் புரிந்தது. அமெரிக்காவில் நடந்த படபிடிப்பின் போது என் ரசிகை ஒருவர் எனக்காக ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் சாப்பாடு செய்து கொடுத்தார். அப்போது தான் என் வயதின் முக்கியத்துவம் எனக்கு புரிந்தது என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து பார்த்திபன் பேசியபோது, எனக்கு 50 வயது என்று வெளிப்படையாக சொல்லும் அழகி என்றால் அது இவர்தான். 28 வயதுக்கு பிறகு பெண்கள் வயதை சொல்ல மாட்டார்கள். ஆனால் தனது அழகின் மீது திமிரு கொண்டவர் சுஹாசினி என்று கூறினார். அப்போது அவர் எழுந்து எனக்கு 63 வயதாகிவிட்டது தெளிவாக சொல்லுங்கள் என்றார். உடனே பார்த்தீர்களா? இதுதான் திமிரு என்றார் பார்த்திபன். இது கலகலப்பூட்டும் விதமாக அமைந்தது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.