4 வயது சிறுமியின் தொண்டையில் சிக்கிய ஒரு ரூபாய் நாணயம்!
Dinamaalai May 15, 2025 01:48 AM

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வசித்து வரும் சிறுமி 4 வயது சாரா. இவர்  வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கியதாக தெரிகிறது. இதனையடுத்து  பெற்றோா் அவரை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனா். அங்கு எக்ஸ்ரே எடுத்து பாா்த்ததில் குழந்தையின் தொண்டையில் நாணயம் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக அவசர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு  மே 9ம் தேதி ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.  மருத்துவா்கள் அறிவுறுத்தலின்படி அவசர அறுவை சிகிச்சை மருத்துவக் குழு அமைக்கப்பட்டு அன்றைய தினமே உணவுக் குழாய் உள்நோக்கிக் கருவியை பயன்படுத்தி சிறுமியின் தொண்டையில் சிக்கியிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை மருத்துவா்கள் குழு வெற்றிகரமாக அகற்றியது.

அதன்பின் தொடா் சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவசர அறுவை சிகிச்சைக் குழுவில் மயக்க மருத்துவத் துறை தலைவரும், இணை பேராசிரியருமான சங்கீதா, மயக்க மருத்துவ நிபுணா் நவீன்குமாா், காது-மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியா்கள் சுஜய்குமாா், வினோத்குமரன், சபரிஷ், தினேஷ், அவசர சிகிச்சை துறையின் மருத்துவா் சதிஷ், செவிலியா் குணசுந்தரி இருந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.