தொடரும் சோகம்... பொதுத்தேர்வில் மார்க் குறைஞ்சிடுச்சி... பெற்றோர் திட்டியதால் மாணவன் தற்கொலை!
Dinamaalai May 15, 2025 02:48 AM

தமிழகத்தில் மாநில வழி பாடத்திட்டத்தில் பயின்ற  மாணவர்களின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகின. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். தமிழகம் முழுவதும்  4.05 லட்சம் மாணவிகளும், 3.47 லட்சம் மாணவர்களும் தேர்ச்சி அடைந்திருந்தனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்தது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணை தேர்வுக்கு மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறி தந்தை திட்டியதால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் கிராமத்தில் +2 பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறி தந்தை திட்டியதால் மாணவன் கவியரசன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.