ஆச்சரியமூட்டும் வீடியோ... சிங்கிளா சிக்கிட்டியே பங்கு... சிறுத்தையை ஓட ஓட விரட்டியடிக்கும் நாய்கள் !
Dinamaalai May 15, 2025 03:48 AM


தினமும் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வார் மாவட்டத்தின் ராணிக்கேத் பகுதியில், வனப்பகுதியில்  ஒரு சிறுத்தை, அங்கிருந்த நாய்களை வேட்டையாட முயன்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக, அந்த நாய்கள் ஒன்று சேர்ந்து சிறுத்தையை விரட்டியடித்தன.  


சிறுத்தையை பார்த்து பொதுவாக பயந்து ஓடக்கூடிய நாய்கள் குழுவாக சேர்ந்து அந்த சிறுத்தையை முற்றிலும் சுற்றி வளைத்து, அதை கடுமையாக தாக்கின. அந்த நாய்கள் காட்டிய துணிச்சலும், ஒற்றுமையும் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.  
சிறுத்தை உயிர் பாதுகாப்புக்காக திடீரென அந்த இடத்திலிருந்து ஓடிச்சென்று தப்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.  இச்சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.  பெரும்பாலானோர் இது போன்ற ஒரு அபூர்வமான காட்சி முதன்முறையாக தான் காண்கிறோம் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.