அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில், ஓக் லீஃப் டிரைவில் உள்ள உயர் மாடிக் கட்டிடத்தில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 15-வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து விழுந்த 2 வயது சிறுவன் உயிருடன் தப்பி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை வீதியில் விழுந்தபோது, முதலில் புதர்களின் மீது விழுந்து, அதன் பின் தரையில் உரசியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்தச் சம்பவம் மே 15ஆம் தேதி நடைபெற, குழந்தைக்கு ஒரே ஒரு கை முறிவு ஏற்பட்டது. குழந்தை உயிர் தப்பியதற்கு சிறிய உடல் எடை மற்றும் வயது, இதற்கு முக்கிய காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குழந்தையின் பெற்றோர் வீட்டிலிருந்தபோதும், எப்படி பாதுகாப்பு கண்ணாடியை கடந்து குழந்தை விழுந்தது என்பது குறித்து தெளிவான தகவல் இன்னும் இல்லை. மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.