உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் 18 வயது மாணவி வசித்து வருகிறார் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அமன் சோன்கர் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவி முதலில் இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் நட்பை வளர்த்தார். பின்னர் அவரது மீது பல்வேறு குற்றவியல் வழக்குகள் உள்ளதை அறிந்ததும், அவரது தொடர்பை முற்றிலும் துண்டித்துவிட்டார்.
இந்த நிலையில், அமன் தொடர்ச்சியாக மாணவியின் குடும்பத்தினருக்கும் பல முறை மிரட்டல் விடுத்துள்ளார். நேற்று காலை, உனது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டி அமன் மாணவியை ஒரு பூங்காவிற்கு வரும்படி அழைத்தார்.
மாணவி வந்தபின் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்துள்ளார். அதற்கு மாணவி மறுத்ததும், துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். பொதுமக்கள் தலையிட்டு மாணவியை காப்பாற்றினர். சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மாணவியும் அவரது தாயும் அளித்த புகாரின் பேரில், போலீசார் பாரத் ந்யாய சன்ஹிதா சட்டத்தின் 351(2) மற்றும் 115(2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக இருக்கும் அமன் சோன்கரை போலீசார் தேடி வருகின்றனர்.