2020 ல் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனா பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 18 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.
இது தவிர புதுச்சேரியில் 13 பேரும், கேரளாவில் 15 பேரும், கர்நாடகாவில் 4 பேரும், மகாராஷ்டிராவில் 7 பேரும், டெல்லியில் ஒருவரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வகையான கொரோனா வீரியமில்லாத காரணத்தால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என தெரிவித்துள்ளது.