உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் வசித்து வருபவர் அனுராதா. இவர் 2018ல் விஷால் பாஸ்வான் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக விஷால், குடும்பத்திலிருந்து விலகிவிட்டார். அதன் பிறகு அனுராதாவுடன் தொடர்பு முறிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். என் மகன் இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட நமக்குத் தெரியவில்லை என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
புகார் அளித்த விஷ்ணு சர்மா என்பவர், ரூ.2 லட்சம் கொடுத்து அனுராதாவை திருமணம் செய்துகொண்டார். ஏப்ரல் 20ம் தேதி சவாய் மாதோபூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது. மே 2ம் தேதி இரவு, அனுராதா தன்னிடம் இருந்த நகை, பணம் மற்றும் மொபைல் போனை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. போலீசார் தனிப்படை அமைத்து போபாலில் நடத்திய அதிரடி சோதனையில், ஒரு தரகர் காட்டிய புகைப்படத்தின் அடிப்படையில் அனுராதாவை கைது செய்துள்ளனர்.
இந்த மோசடியில் அனுராதாவுடன் போபாலைச் சேர்ந்த பல தரகர்கள், பெண்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர். அவர்கள் திருமணத்துக்கு வர விரும்பும் ஆண்களை வாடிக்கையாளர்களாக அடையாளம் காட்டி ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஒப்பந்தங்கள் செய்து திருமணங்களை நடத்தி வந்துள்ளனர்.
அனுராதா திருமணமாகிய சில நாட்களுக்குள் தப்பியோடி மணமகனின் வீட்டில் கொள்ளை நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இந்த போலித் திருமண மோசடி கும்பலின் நடவடிக்கைகளை நிறுத்த காவல்துறையினர் விரிவான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.