ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் கல்லூரி மாணவன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ளது மிட்ஸ் கல்லூரி. அதில் ராயச்சோட்டியைச் சேர்ந்த மாணவரான தனுஜ் என்ற மாணவன் பி.டெக். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து தீப்பிடித்தது. இதில் மாணவரின் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.