இந்நிலையில் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 227 பயணிகளுடன் ஸ்ரீ நகரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. பலத்த காற்று மற்றும் மழையினால் விமானமானது டர்புலன்ஸ்சில் சிக்கியது, மேலும் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையின் காரணமாக விமானத்தில் முன் பகுதி சேதமடைந்தது. இதனால் விமானி உடனடியாக ஸ்ரீ நகர் விமான நிலையத்துக்கு தகவல் கொடுத்தார் இதையடுத்து விமானது அவசர அவசரமாக ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானியின் சாதுர்யமான கையாடலால் விமானத்தில் இருந்த 227 பத்திரமாக தரையிறங்கினார். ஆலங்கட்டி மழையினால் விமானத்தின் முன்பகுதி நன்கு சேதமடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ விமானம் அளித்துள்ள அறிக்கையில் "டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E 2142, வழியில் திடீரென ஆலங்கட்டி மழையை சந்தித்தது. விமானம் மற்றும் கேபின் குழுவினர் நிறுவப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றினர், மேலும் விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானம் வந்த பிறகு, விமான நிலையக் குழு பயணிகளின் நலனுக்கும் வசதிக்கும் முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு உதவியது. தேவையான ஆய்வு மற்றும் பராமரிப்புக்குப் பிறகு விமானம் விடுவிக்கப்படும்," என்று விமானம் நிறுவனம் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது .
இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) டெரெக் ஓ'பிரையன், சாகரிகா கோஸ், நதிமுல் ஹக், மம்தா தாக்கூர் மற்றும் மனாஸ் பூயான் ஆகியோர் அடங்கிய எம்.பிக்கள் குழு விமானத்தில் இருந்தது.
இது குறித்து பதிவிட்டுள்ள சரிகா கோஷ்"அது ஒரு மரண அனுபவமாக இருந்தது. என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தேன். மக்கள் அலறிக் கொண்டிருந்தார்கள், பிரார்த்தனை செய்தார்கள், பீதியடைந்தார்கள். அந்த வழியாக எங்களை அழைத்துச் சென்ற விமானிக்கு பாராட்டுகள். நாங்கள் தரையிறங்கியபோது விமானத்தின் மூக்கு வெடித்திருப்பதைக் கண்டோம்," என்று கோஷ் கூறினார்.