உணவு பிரியர்கள் அதிர்ச்சி... Zomatoவில் புதிய தொலைதூர சேவை கட்டணம்!
Dinamaalai May 23, 2025 04:48 AM


உலகம் முழுவதும் உணவுப்பொருள் விநியோக செயலில் ஜொமேட்டோ.  தற்போது 4 கி.மீ-க்கு மேற்பட்ட தொலைவில் உணவுகளை டெலிவரி செய்து வருகிறது. தற்போது  புதிய “தொலைதூர சேவை கட்டணத்தை” அறிமுகம் செய்துள்ளது.  பொருட்களின் ஆர்டர் ரூ.150-க்கு மேல் இருந்தால், 4-6 கி.மீ. தொலைவுக்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும்.
அதேசமயம், 6 கி.மீ-க்கும் மேற்பட்ட டெலிவரிக்கு, நகரத்தைப் பொறுத்து ரூ.25 முதல் ரூ.35 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.  வாடிக்கையாளர் செலவழிக்கும் தொகைக்கு இதனுடன் சம்பந்தம் இல்லை என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.  
Zomato நிறுவனம் உணவகங்களுக்கு அனுப்பிய தகவலின்படி, இந்த புதிய கட்டணத்துடன் சேர்த்து, மொத்த சேவை கட்டணங்கள் 30% ஐ கடந்துவிடாது என உறுதி அளித்துள்ளது.  பல உணவக உரிமையாளர்கள், Zomato  45% வரை  கமிஷன் வசூலிப்பதாக கூறுகின்றனர்.  
தினமும் மாறும் விதிமுறைகளால் வாடிக்கையாளர்களுடன் தாங்கள் கடும் சிரமம் அடைவதாக உணவகங்கள் கூறி வருகின்றன. சில உரிமையாளர்கள் ஒன்றாக இணைந்து ஒரு நாள் செயல்பாட்டை நிறுத்தும் போராட்டத்தையும் திட்டமிட்டுள்ளன.  Zomato நிறுவனம், தற்போது தனது பெயரை “Eternal” என மாற்றும் திட்டத்திற்காக, உணவகங்களிடம் புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்து செய்ய இருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.