கொடூரம்... ஜூஸ் கொடுத்து கணவனை தீர்த்துகட்டி மாணவர்கள் துணையுடன் உடலை எரித்த தலைமை ஆசிரியை... !
Dinamaalai May 23, 2025 04:48 AM

மகாராஷ்டிரா மாநிலத்தில்  லோகோரா பகுதியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நிதி. இவர்  தன் கணவரை ஜூஸ் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  23 வயதான நிதி என்பவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சாந்தனு தேஷ்முக்.   

இவருக்கு சம்பவ நாளில் ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் தன் கணவன் இறந்தபிறகு  தன்னிடம் டியூஷன் படிக்கும் 3 மாணவர்களின் உதவியுடன்  காட்டிற்கு கணவனின் உடலை எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக தெரிகிறது.  


கணவன் அடிக்கடி அடித்து ஆபாச வீடியோக்களை காண்பித்து மிரட்டி துன்புறுத்தியுள்ளார். இதனால் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார் தலைமை ஆசிரியர். இச்சம்பவம் மே  15 ம் தேதி நடைபெற்ற நிலையில் காட்டில் எரிந்த நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில்  நிதியை கைது செய்து  காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.