நீட் தேர்வு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும் ஆர்வமுள்ள மாணவர்கள் NTA இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in இல் தங்கள் மதிப்பெண் குறித்து அறிந்துக்கொள்ள முடியும்.
இந்த ஆண்டு 22.7 லட்சம் பேர் நீட் நுழைவுத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு இந்தியாவில் 557 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 என 4,750 தேர்வு மையங்களில் நடைபெற்றது. பிப்ரவரி 7 தேதியிட்ட NTA அறிவிப்பின்படி, NEET UG தேர்வு முடிவு 2025 தற்காலிக தேதியை ஜூன் 14 என அறிவித்தது.
ஆனால் NTA கடந்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி நீட் தேர்வு முடிவை வெளியிட்டது. இந்தமுறை நீட் தேர்வு முடிவு நாளை அறிவிக்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவு ஆன்லைன் முறையில் அறிவிக்கப்படும்,
நீட் தேர்வு 2025 முடிவுகளை அறிந்துகொள்ளும் வழிகள்
படி 1: NTA இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான nta.nic.in மூலம் அறிந்துகொள்ள முடியும். இணைத்தளத்திற்கு சென்ற பிறகு, முகப்புப் பக்கத்தில் உள்ள NEET (UG) 2025 Results என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: neet.nta.nic.in இல், NEET 2025 தேர்வு முடிவுகள் பதிவிறக்கம் இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: NEET 2025 விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு மற்றும் திரையில் தெரியும் CAPTCHA-வை உள்ளீட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: NEET 2025 தேர்வு முடிவுகள் PDF வடிவத்தில் திரையில் தெரியும். அதனை பதிவிறக்கவும் செய்துக்கொள்ளவும்.
நீட் தேர்வு முடிவுகளில் மாணவர்கள் எதை சரிபார்க்க வேண்டும்?
வேட்பாளரின் பெயர்
ரோல் எண்
விண்ணப்ப எண்
பெற்ற மதிப்பெண்கள் (இயற்பியல், வேதியியல், உயிரியல்)
மொத்த மதிப்பெண்கள்
NEET UG தகுதி நிலை
வகை தரவரிசை
சதவீத மதிப்பெண்
அகில இந்திய தரவரிசை (AIR)
கட்-ஆஃப் மதிப்பெண்கள்