இது என்ன புதுசா இருக்கே..! இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியிடம் 90 கோடி ரூபாய்க் கேட்கும் சிக்கந்தர் தயாரிப்பாளர்…! புதுசா இருக்கே..!
Newstm Tamil June 22, 2025 11:48 AM

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸானது. ஆனால் ரிலீஸாவதற்கு முன்பே இந்த படத்தின் HD பிரிண்ட் முதல் நாளே இணையத்தில் ரிலீஸானது. இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது.


இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை அமைத்திருந்தார். படம் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. இதன் மூலம் மிக மோசமான தோல்விப் படமாக அமைந்தது.

இந்நிலையில் சிக்கந்தர் படத்தின் தயாரிப்பாளர் சஜித் நடியவாலா இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு பெற முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் ரிலீஸாவதற்கு முன்பே இணையத்தில் வெளியானதால் 91 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் பெற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.