எயிட்ஸுக்கு தற்காலிக தடுப்பூசி கண்டுபிடிப்பு.. அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!
Dinamaalai June 23, 2025 01:48 AM

எயிட்ஸ் நோய் வருவதற்கு காரணமாக இருக்கும் எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளின் தாக்கத்திற்கு நீண்டகாலமாக மருந்து கண்டறியப்படாமல் இருக்கும் நிலையில், எயிட்ஸுக்கு தற்காலிக தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

எச்.ஐ.வி. வைரஸுக்கு நீண்ட காலங்களாக தடுப்பூசி கண்டுப்பிடிக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், கேன்சரைப் போலவே எச்.ஐ.வி.க்கும் தடுப்பூசி கண்டுப்பிடிப்பதில் சிக்கல்கள் நீடித்து வந்தது. 

உலகில் ஒரு சில நாடுகள், அவ்வப்போது எச்.ஐ.வி.க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்திருந்தாலும், இது வரை அவற்றிக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தடுப்பு மருந்துகள் குறித்து அவர்கள் அளித்த தகவல்கள் போதுமான அளவில் சரியில்லாததாலும், தரவுகளின் நம்பகத் தன்மை இல்லாததாலும் அந்த  மருந்துகளை அங்கீகரிக்க முடியவில்லை.

இப்போது வரை ஒருவரின் இரத்தத்தில் எச்.ஐ.வி வைரஸ் நுழைந்து விட்டால், அதன் பின்னர் அந்த வைரசை முழுவதுமாக அழிக்க முடியாது என்கிற நிலை தான் மருத்துவத்துறை நீடித்து வருகிறது. எச்.ஐ.வி. வைரஸ் தொடர்ச்சியாக இரத்தத்தில் பரவும் தன்மை கொண்டது.  இந்த வைரஸை முற்றிலும் அழிக்கும் வகையில் இதுவரையில் எந்த மருந்தும் இல்லை. இதனால் இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் மோசமான நிலை உள்ளது.

கோவிட் பெரும் தொற்று காலத்திற்கு பிறகு உலகளவில் மருத்துவ துறையில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. நீண்ட காலமாக பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்காமல் இருந்தனர். அமெரிக்காவை தவிர எந்த நாடும் புதிய மருந்து சோதனைகளில் ஈடுபடவில்லை. பல நாடுகள் மருத்துவ துறையில் நீண்ட காலமாக தேக்கத்தில் இருந்தன. இந்த சூழல் கோவிட் காலத்தில் மாறத் தொடங்கியது.

தற்போது எச்.ஐ.வி. வைரஸுக்கு மருந்து கண்டறிய முடியாவிட்டாலும் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து (FDA) நிர்வாகம் லெனாகாபாவிர் என்ற தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நபரை 6 மாதங்கள் வரை எச்.ஐ.வி நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது. இது ஒரு வருமுன் காக்கும் தடுப்பு மருந்தே தவிர சிகிச்சை முறை அல்ல.ஏற்கனவே எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இந்த ஊசியால் எந்த பலனும் இல்லை.

இந்த ஊசி ஒப்புதலுக்கு மூன்று சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த ஊசியைப் செலுத்திக் கொண்ட பெண்கள் எச்.ஐ.வி வைரஸிலிருந்து 100% பாதுகாக்கப்பட்டனர். இந்த ஊசியை செலுத்திக் கொண்ட ஆண்களில் 0.1% பேர் மட்டுமே எச்.ஐ.வி நோயால் தாக்கப்பட்டனர். ஒருவர் லெனகாபாவிர் ஊசியை செலுத்திக் கொண்டால் 6 மாதங்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் என்றும், அதன் பின்னர் மீண்டும் அதே ஊசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் எச்.ஐ.வி பரிசோதனை செய்ய கொள்ள வேண்டும். இந்த ஆராய்ச்சி முடிவுகள் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.