போதைப்பொருள் வழக்கு…!! நடிகர் ஸ்ரீகாந்திடம் ரகசிய விசாரணை…. அதிர்ச்சியில் திரையுலகினர்….!!
SeithiSolai Tamil June 23, 2025 06:48 PM

சென்னையின் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல பப்பில் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு சண்டையைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் போதைப்பொருள் வழக்கில் நடவடிக்கை எடுத்தனர்.

விசாரணையில், பிரசாந்த் தலைமையில் கொக்கைன் போன்ற போதைப்பொருட்கள் பலரிடம் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு, பிரசாந்த் நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் வழங்கியதாக ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, இன்று காலை நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் அவரது இல்லத்தில் இருந்து அழைத்து சென்று, ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு துரித விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கி நுகர்ந்தாரா அல்லது அவர் மற்றவர்களுக்கு வழங்கியதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில், போலீசார் பிளட் டெஸ்ட் உள்ளிட்ட அறிவியல் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அவரிடம் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த விவகாரம் திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விசாரணை முடிவுகளைத் தொடர்ந்து, அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.