அடப்பாவமே…! 52 ஆண்டுகளாக முதியவர் வயிற்றில் சிக்கி இருந்த டூத் பிரஷ் அகற்றம்…. அதிர்ச்சி சம்பவம்…!!
SeithiSolai Tamil June 25, 2025 01:48 AM

சீனாவைச் சேர்ந்த யாங் என்பவரின் வயிற்றில் 52 ஆண்டுகளாக இருந்த 17 சென்டிமீட்டர் நீளமுள்ள டூத் பிரஷ் அகற்றப்பட்டுள்ளது. 12 வயதில் யாங் தவறுதலாக அந்த டூத் பிரஷ்சை விழுங்கிவிட்டார். அதன் பிறகு வீட்டில் சொன்னால் திட்டுவார்களோ என்ற அச்சத்தில் சொல்லாமல் மறைத்து விட்டார்.

காலப்போக்கில் டூத் பிரஷ் வயிற்றில் இருந்து வெளியேறிவிடும் என நினைத்து நாட்களை கழித்துள்ளார். சமீபத்தில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட யாங்கை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் அவரது வயிற்றில் டூத் பிரஷ் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் மருத்துவர்கள் அகற்றி விட்டனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.