தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிம்பு. இவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இளம் வயதிலேயே சிம்புவுக்கு கிடைத்தது. அதன்படி குழந்தை நட்சத்திரமாக 1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு.
2002 ஆம் ஆண்டு இவரது தந்தை டி ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சிம்பு. தொடர்ந்து கோவில், மன்மதன், வல்லவன், சரவணா, விண்ணைதாண்டி வருவாயா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சிம்பு.
அதைத்தொடர்ந்து சற்று இடைவெளி விட்டு விட்டு மாநாடு, ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார் சிம்பு. தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. சமீபத்தில் அவரது பிறந்தநாளுக்கு கூட மூன்று படங்களின் அப்டேட்டுகள் வெளிவந்தது. தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் சிம்பு நடித்த Thug Life படம் வெளியாகி இருக்கிறது.
அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வரும் சிம்புவைப் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால், சிம்பு வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான மாநாடு திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே சிம்புவும் வெங்கட் பிரபுவும் கமிட்டான ப்ராஜெக்டுகளை முடித்த பிறகு இருவரும் மீண்டும் இணைந்து மாநாடு 2- வை உருவாக்குவார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.