இணைந்த தாக்கரே சகோதரர்கள்.. அஞ்சி நடுங்கும் மஹாராஷ்ட்ரா பாஜக அரசு?
A1TamilNews July 06, 2025 01:48 AM

இரண்டு கட்சிகளாகப் பிரிந்து இருந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே சகோதரர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் தோன்றியது மஹாராஷ்ட்ரா அரசியலில் பெரும் பரபரப்பையும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.

மஹாராஷ்ராவில் மூன்றாவது மொழியாக இந்தியை அறிவித்தது பாஜக அரசு. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரிந்து கிடந்த அண்ணன் தம்பிகள் இருவரும் ஒன்று சேர்ந்தனர். இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து போராட்டத்தை அறிவித்தனர். இருவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்த குரல் எழுப்பியதைக் கண்டு அஞ்சிய பாஜக அரசு பின் வாங்கியது. பள்ளிகளில் திணிக்கப்பட்ட மூன்றாவது மொழியை நீக்கினார்கள்.

போராட்ட அறிவிப்பை வெற்றிப் பேரணியாக மாற்றினார்கள் அண்ண்ன் தம்பிகள். ஒரே மேடையில் இருவரும் மராட்டி மொழியைக் காப்பதற்கான உறுதிமொழியை எடுத்தனர். இந்தித் திணிப்பு எப்படி தங்கள் தாய்மொழி மராட்டியை ஒழித்து விடும் என்று மராட்டிய மக்களுக்கு தெளிவாகப் புரிய வைத்துள்ளனர்.

இன்று நடைபெற்ற விழாவில் ஓரமாக நின்று கொண்டிருந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரேவின் மகன்களை கையைப் பிடித்து அழைத்து வந்து, சித்தப்பா, பெரியப்பா அருகில் நிற்கச் செய்ததார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே. இந்தக் காட்சியை கண்டதும் கூட்டத்தில் பெரும் ஆரவாரம் எழுந்தது.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அண்ணன் தம்பியை ஒன்று சேர்த்த இந்தி மொழித் திணிப்புக்க்காக பாஜகவே கவலை கொண்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணித் தலைவர்களும் பங்கேற்றனர். இந்தியா கூட்டணிக்கு ராஜ் தாக்கரேவின் கட்சியும் வந்துவிடும், உள்ளாட்சி தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது.

ராஜ் தாக்கரேவின் மஹாராஷ்ட்ரா நவநிர்மான் கட்சியும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ஒன்றாகி ஒருங்கிணைந்த சிவசேனாவாக உருவாகிவிடும் என்ற பேச்சுக்களும் எழத் தொடங்கியுள்ளது

ஒருங்கிணைந்த சிவசேனாவில் தலைவர், செயல் தலைவர் என்ற வகையில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். இருவரின் மகன்களுக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.