இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும் நிலையில் அதிலும் விலங்குகள் பற்றிய வீடியோ என்றாலும் சொல்லவே வேண்டாம். பார்க்க பார்க்க ரசனை தான். அதிலும் சில விலங்குகளின் புத்திசாலித்தனத்தை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த வகையில் தான் ஒரு புறாவின் புத்திசாலித்தனமும் அதன் உயிரை காத்த ஆபரேட்டரின் மனிதாபிமானமும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது. அதாவது ஒரு கண்டெய்னரை மற்றொரு கண்டெய்னர் மீது வைப்பதற்காக ஆபரேட்டர் முயற்சி செய்யும் நிலையில் ஒரு புறா அதன் மீது அமர்ந்திருந்தது.
அந்த புறா அங்கிருந்து நகராத நிலையில் அதனை விரட்டவும் வழியில்லை. இதன் காரணமாக ஆபரேட்டர் மெதுமெதுவாக அந்த கண்டெய்னரை நகர்த்திய நிலையில் ஒரு சிறிய வழி மட்டும் வைத்திருந்தார். பார்ப்பதற்கு கண்டெய்னர் முழுமையாக வைத்தது போன்று தோன்றும். ஆனால் அவர் சிறிது இடைவெளி வைத்திருந்தது உண்மை. பின்னர் அந்த புறா அந்த சிறிய ஓட்டையின் வழியாக வெளியே சென்றது. அதன் பிறகு கண்டெய்னர் முழுமையாக மற்றொரு கண்டெய்னர் மீது வைத்தார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.