ஜம்மு-காஷ்மீரின் ராம்பனில் உள்ள சந்தர்கோட் லங்கர் தளத்திற்கு அருகே பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தனர். இவர்கள் சென்று கொண்டிருந்த வாகனங்களில் கடைசி வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 4 வாகனங்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து ஏற்பட்டதும் உடனேயே சிவில் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்களில் ராம்பன் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
"மொத்தம் 36 பேர் படுகாயமடைந்த நிலையில் அனைவருக்கும் சிறிய காயங்கள் உள்ளன. மேலும் அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," என ராம்பன் மாவட்ட மருத்துவமனையின் பொறுப்பாளர் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் முகமது ரஃபி கூறினார்.
முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு 10 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் . மீதமுள்ளவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். விபத்தில் வாகனங்கள் சேதமடைந்ததால், தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கு பக்தர்கள் தங்கள் பயணத்தைத் தொடர நிர்வாகம் மாற்று வாகனங்களை வழங்கியுள்ளது என மாவட்ட ஆட்சியர் கூறினார்.இந்த விபத்தில் சிறிய காயங்களுக்கு ஆளான பக்தர்கள் அமர்நாத் குகைக்கு தங்கள் பயணத்தைத் தொடர நிர்வாகம் வாகனங்களையும் வழங்கி வருவதாக கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?