இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து மகளிர் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டி20 போட்டி ஜூலை 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காயம் காரணமாக டி20 தொடரின் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலிருந்தும் இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட்நாட் ஷிவர் பிரண்ட் விலகியுள்ளார்.
மூன்றாவது டி20 போட்டியில் அணியை வழிநடத்திய டம்மி பியூமாண்ட், மீதமுள்ள போட்டிகளிலும் இங்கிலாந்து அணியை கேப்டனாக வழிநடத்துவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக விலகியுள்ள நாட் ஷிவர் பிரண்ட்டுக்குப் பதிலாக மையா பௌச்சியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மீதமுள்ள டி20 போட்டிகளிலிருந்து நாட் ஷிவர் பிரண்ட் விலகியுள்ள நிலையில், ஒரு நாள் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு அவர் தயாராக இருப்பார் எனக் கூறப்படுகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் ஜூலை 16 முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?