கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன். இவர் ஜூன் 23ம் தேதி மாரடைப்பு மற்றும் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் , 101 வயதான அச்சுதானந்தன் தீவிர சிகிசைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
அச்சுதானந்தன் தனது உடல் நிலை மற்றும் வயது மூப்பு காரணமாக சமீபகாலமாக அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகியே இருந்தார். மேலும் அவர் 2006 முதல் 2011 வரை மாநில முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?