தமிழகத்தில் 2026ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏப்ரல் மாதம் சென்னை வந்து அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். பின்னர் கடந்த மாதம் மதுரைக்கு வந்த அமித்ஷா, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து நாளை மறுநாள் ஜூலை 7ம் தேதி சென்னை வரவிருந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
பாஜக தேசிய தலைமை மாற்றம் தொடர்பான பணிகளில் அவர் மும்முரமாக இருப்பதாகவும் கட்சித் தலைமை நியமனத்திற்குப் பிறகு அவர் தமிழகம் வருவார் எனவும் கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 7ம் தேதி கோவையில் தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்தக் கூட்டணியில் பாஜகவினரும் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?