தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான திருவிழா களைக்கட்ட துவங்கி இருக்கிறது. முதல்வர் பிரச்சாரத்தைத் துவங்கிய நிலையில், எதிர்கட்சித் தலைவரான இபிஎஸ் இன்று தனது பிரச்சாத்திற்கான சூறாவளி பயணத்தைத் தொடங்குகிறார்.
முன்னதாக துஎடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணத்துக்கான இலச்சினை மற்றும் பாடல் ஜூலை 5ம் தேதி வெளியிடப்பட்டது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் இன்று ஜூலை 7ம் தேதி முதல் ஜூலை 23 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஜூலை 7ம் தேதி கோவை மேட்டுப்பாளையம், 8ம் தேதி கோவை மாநகர், 10ம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி மற்றும் திண்டிவனம், 11ம் தேதி விழுப்புரம், 12ம் தேதி கடலூர், 14ம் தேதி கடலூர் குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி,15ம் தேதி பெரம்பலூர், அரியலூர், 16ம் தேதி சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில், 17ம் தேதி மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், 18ம் தேதி திருவாரூர், நாகை, கீழ்வேளூர், 19ம் தேதி நாகை, வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, 21ம் தேதி திருவாரூர் மன்னார்குடி, கும்பகோணம், 22ம் தேதி தஞ்சாவூர் பாபநாசம், திருவையாறு, 23ம் தேதி தஞ்சாவூர் மத்தியம் ஒரத்தநாடு, பேராவூரணி பட்டுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணத்துக்கான இலச்சினை மற்றும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்து திமுக அரசு நிறைவேற்ற தவறிய வாக்குறுதிகள் குறித்து விளக்குவேன் எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?