அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கெர் கவுண்டியில் பெரும் கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர். அதில், 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அங்கு வசித்து வருபவர்கள் பலரும் தங்களது உடைமைகளை இழந்து சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். சான் அன்டோனியோ அருகே உள்ள கெர்கவுண்டியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
30 செ.மீ. அளவுக்கு பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர்மட்டம் சுமார் 26 அடி உயர்ந்தது. இதனால் பல வாகனங்கள் மற்றும் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. தற்போது, ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?