எம்.எஸ்.தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
Dinamaalai July 07, 2025 03:48 PM

 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. இவர் இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் எம்.எஸ். தோனி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர்   ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது  எக்ஸ் தளத்தில்  வெளியிட்டுள்ள பதிவில்  அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு நகர்வின் மூலம் கவிதையாய் மாற்றிய கிரிக்கெட்டின் தனித்துவமிக்க அரிய வீரர் மகேந்திர சிங் தோனிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 

பெருமை பிறப்பிலேயே வருவதல்ல, எடுக்கும் ஒவ்வொரு முடிவினாலும், ஒவ்வொரு ஓட்டத்தினாலும், அமைதியாக ஈட்டுகின்ற ஒவ்வொரு வெற்றியாலும் கட்டமைக்கப்படுவது அது என நீங்கள் காட்டியிருக்கிறீர்கள் என  தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.