“பெற்ற மகளையே 4 முறை விற்பனை செய்த தந்தை”… மாறி மாறி பலாத்காரம் செய்து சீரழித்த கொடூரம்… கடத்தல் புகார் கொடுத்து போலீசாரையும் குழப்பிய அதிர்ச்சி… பரபரப்பு உண்மை..!!!!
SeithiSolai Tamil July 07, 2025 05:48 PM

ராஜஸ்தான் மாநிலத்தின் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள சௌராசி காவல் நிலையப் பகுதியில், மனிதநேயத்தை மங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பணத்திற்காக தனது 16 வயது ச மகளை ஒரு தரகரின் உதவியுடன் நான்கு முறை வெவ்வேறு இடங்களில் விற்றுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின்னர் தனது மகளை யாரோ கடத்தியதாக போலி புகார் அளித்து, காவல்துறையையும் குழப்பியுள்ளார்.

இச்சம்பவம் கடந்த மே 23ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்தது. அந்த புகாரில், ஏப்ரல் 10ஆம் தேதி தனது மகள் சந்தைக்குச் செல்வதாக கூறி வீடு விட்டு சென்றுவிட்டு மீண்டும் வரவில்லை எனவும், பல இடங்களில் தேடியும் காணப்படவில்லை எனவும் கூறப்பட்டது. ஆனால், ஏப்ரல் 24ஆம் தேதி அந்த சிறுமி தனது குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப்பில் அழைத்துத் தொடர்பு கொண்டு, குஜராத்தில் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை கடத்திய நபரின் ஆதார் அட்டையையும் அனுப்பினார்.

அந்த ஆதார அடிப்படையில் போலீசார் குஜராத்தின் பயத் பகுதியில் சோதனை நடத்தி அந்த சிறுமியை மீட்டனர். விசாரணையின் போது அந்த சிறுமி கொடூரமான தகவலை வெளியிட்டார். யாரும் தன்னை கடத்தவில்லை, மாறாக அவரது தந்தை மற்றும் தரகர் சேர்ந்து குஜராத்தில் உள்ள சாந்த்ராம்பூர், பயத், படான் மற்றும் மால்பூர் ஆகிய நான்கு பகுதிகளிலும் தன்னை விற்றதாக கூறியுள்ளார். மேலும், அந்த இடங்களில் விற்கப்பட்ட பிறகு பலர் அவரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாகவும் புகாரளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட தந்தை மற்றும் ரத்தன்லால் என்ற தரகரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. மனிதத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெற்ற தந்தையிடமே ஒரு மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.