2026 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து தொடங்கினார்.இசட் பிளஸ் பாதுகாப்புடன் கோவை வந்த அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து மேட்டுப்பாளையம் தொகுதி தேக்கம்பட்டியில் அமைந்துள்ள வனப்பத்திரகாளியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, 10.30 மணியளவில் விவசாயிகளைச் சந்தித்து அவர் பேசவுள்ளார். அடுத்ததாக, பிளாக் தண்டர் செல்லும் எடப்பாடி பழனிசாமி, மாலை 4.35 மணியளவில் பிளாக் தண்டர் முதல் ஊட்டி சாலை காந்தி சிலை வரையில் ரோடு ஷோவும் செல்கிறார். இறுதியாக, மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய சந்திப்புக்கு அவர் செல்கிறார்.
மேற்குறிப்பிட்ட 5 இடங்களிலும் மக்களைச் சந்தித்து, பிரசார வாகனத்தில் இருந்தவாறே எடப்பாடி பழனிசாமி உரையாற்றவுள்ளார். மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற அவரின் பிரசாரப் பயணம் ஜூலை 23ஆம் தேதி பட்டுக்கோட்டையில் நிறைவடைகிறது.
அதேநேரத்தில், 2024 மக்களவைத் தோ்தல் தோல்வியில் இருந்து மீண்டு, மீண்டும் ஒரு வெற்றிக்கான எழுச்சியை எடப்பாடி கே.பழனிசாமியின் பிரசாரம் ஏற்படுத்துமா என்பதை அரசியல் நோக்கா்கள் கூா்ந்து கவனித்து வருகிறாா்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?