57 ஆண்டுகளுக்கு பின் அர்ஜென்டினா செல்லும் இந்தியப் பிரதமர்.. பல்துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..
Tv9 Tamil July 07, 2025 10:48 PM

பிரதமர் மோடி, ஜூலை 5, 2025: இரண்டு நாள் பயணமாக அர்ஜென்டினா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. தற்போது உள்ள ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்யவும் முக்கியமான துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயவும் நாட்டின் உயர் மட்ட தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி ஜூலை 4 2025 அன்று எஸிசா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு அந்நாட்டின் சார்பாக பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. 57 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் அர்ஜென்டினாவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். முன்னதாக 2018 ஆம் ஆண்டு ஜி 20 உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி அர்ஜென்டினா சென்றது குறிப்பிடத்தக்கது.

50 ஆண்டுகளுக்கு பின் அர்ஜென்டினா செல்லும் முதல் இந்தியப் பிரதமர்:

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டினா பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர் மோடி. வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி இந்த பயணம் இந்தியாவிற்கும் அர்ஜென்டினாவிற்கும் இடையிலான கூட்டான்மையை ஆழப்படுத்தும் என் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி குறிப்பிடுகையில் அர்ஜன்டினால் லத்தீன் அமெரிக்காவின் ஒரு முக்கிய பொருளாதார பங்காளியாகவும் ஜி 20 யில் நெருங்கிய நாடாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி சேவியர் மிலேயைச் சந்தித்து பேச்சுவார்த்தை – பிரதமர் மோடி:

Aterricé en Buenos Aires para realizar una visita bilateral que se enfocará en fortalecer las relaciones con Argentina. Me entusiasma reunirme con el Presidente Javier Milei y entablar conversaciones detalladas con él.@JMilei pic.twitter.com/WBRCMT7Wxd

— Narendra Modi (@narendramodi)


இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ” அர்ஜென்டினா உடனான உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த இருதரப்பு பயணத்திற்காக தரையிறங்கியதாகவும். ஜனாதிபதி சேவியர் மிலேயைச் சந்தித்து அவருடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அர்ஜென்டினா உலகின் இரண்டாவது பெரிய ஷேல் எரிவாயு இருப்புகளையும் நான்காவது பெரிய ஷேல் எண்ணெய் இருப்புகளையும் கொண்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க வழக்கமான எண்ணெய் மற்றும் எரிவாயு வைப்புகளையும் கொண்டுள்ளது. இது இந்தியாவிற்கு நீண்ட கால எரிசக்தி வழங்கக் கூடிய நாடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லித்தியத்தின் முக்கிய பங்கு வகிக்கும் அர்ஜென்டினா:

மேலும் அர்ஜென்டினா லித்தியம் தாமிரம் மற்றும் அரிய தனிமங்கள் போன்ற முக்கியமான கனிமங்களால் நிறைந்துள்ளது. இவை இந்தியாவின் எரிசக்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு முக்கியமானவை. பொலிவிஉயா மற்றும் சிலியுடன் சேர்ந்து அர்ஜென்டினா லித்தியத்தின் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மின்சார வாகனங்கள், மொபைல் போன்கள் மடிக்கணினிகள் போன்றவற்றில் பேட்டரிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு, எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஆராய்வது குறித்து அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி விரிவான பேச்சு வார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அர்ஜென்டினா கால் பந்து விளையாட்டை பார்வையிட பிரதமர் மோடி புகழ்பெற்ற போகா ஜூனியர்ஸ் மைதானத்திற்கு செல்வார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயரிய விருது:

அர்ஜென்டினாவின் இந்த பயணத்திற்கு முன்பு பிரதமர் டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது நாடுகளுக்கு இடையே இருக்கக்கூடிய உறவுகளை விரிவுபடுத்த 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. மேலும் மோடிக்கு நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருது ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆப் டிரினிடாட் மற்றும் டொபாகோ விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் வெளிநாடு தலைவர் இவரே ஆவர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.