நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக் உள்ள படம் கிங்டம். தொடர்ந்து 3 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிபோன இந்தப் படம் இறுதியாக தற்போது 31-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று நேற்று 07-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு ரிலீஸ் புரோமோ வீடியோவை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த முறையாவது படம் குறித்த தேதியில் வெளியாகும் என்று ரசிகர்கள் நம்பிகையுடன் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று தற்போது ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. நடிகர் விஜய் தேவரகொண்டா அளித்தப் பேட்டியில் சினிமாவில் எந்தவித சப்போர்ட் சிஸ்டர்ம் (வாரிசு நடிகர்) இல்லாமல் இருந்தால் என்ன பிரச்னை நிகழும் என்பதை வெளிப்படையாக பேசியுள்ளார்.
சினிமாவில் வாரிசு நடிகராக இல்லை என்றால் என்ன நடக்கும்:சினிமாவில் வாரிசு நடிகராக இல்லை என்றால் இயக்குநரின் கதை தனக்கு பிடிக்கவில்லை, அல்லது அந்த கதையில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று இயக்குநரிடம் கூற வாய்ப்பு கிடைக்காது என்று நடிகர் விஜய் தேவரகொண்டா வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் வாரிசு நடிகராக இருந்தால் அந்த வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் எந்தவித சப்போர்ட் சிஸ்டம் இல்லாமல் தொடர்ந்து வளர்ச்சி அடைவது என்பது மிகவும் கடினமான ஒன்று என்று தெரிவித்த விஜய் தேவரகொண்டா, தனக்கு தெரிந்த வாரிசு நடிகர் ஒருவர் அவரது படத்தில் கதை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியதும் அவரது தந்தை திரைக்கதை ஆசிரியர்களை தேர்வு செய்து கதையை மெருகேற்றியதாகவும் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகரக்ளிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
Also read… பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் படம்
இணையத்தில் வைரலாகும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பேச்சு:“If there is no support system (Nepo Baby), don’t have space to tell director that I’m not ready to shoot with this script. But I know an actor with similar experience, who has support system, his father can hire writers to fix script”
– #VijayDeverakondapic.twitter.com/joZwngxkI6— AmuthaBharathi (@CinemaWithAB)
Also read… தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் நானியின் கோர்ட் பட நடிகை!
நடிகர் விஜய் தேவரகொண்ட நடிப்பில் ஹிட் அடித்தப் படங்கள்:2011-ம் ஆண்டு வெளியான நுவ்வில என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் விஜய் தேவரகொண்டா. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான எவடே சுப்ரமணியம், அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா, டியர் காம்ரேட், வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர், குஷி, தி ஃபேமிலி ஸ்டார் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.