“என் படத்தில் நடிகர் சித்தார்த் நடிக்க மாட்டேன்னு சொன்னாரு”… மகேஷ் பாபுவை பார்க்க கூட விடல… நடிகர் தனுஷின் குபேரா பட இயக்குனர் வேதனை…!!!!
SeithiSolai Tamil July 08, 2025 07:48 PM

தமிழ் திரைப்பட நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் சேகர் கம்முலா சினிமா துறையில் தான் கடந்து வந்த நிராகரிப்புகளை பற்றி பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னோட படங்களை நிராகரித்தால் நான் அது குறித்து கவலைப்படவோ அல்லது கோபப்படவோ வெறுப்படையவோ மாட்டேன்.

ஏனெனில் என்னால் ஒரு சிறந்த படத்தை கொடுக்க முடியும். ஆனால் அந்தப் படம் அதில் நடிக்கும் நடிகர்களுக்கு புகழைத் தேடித் தரும் என்பது என்னால் சொல்ல முடியாது.

மேலும் என்னால் நல்ல படத்தை கொடுக்க முடியுமே தவிர அதில் நடிக்கும் நடிகர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுக்க முடியும் என கூற முடியாது.

நான் கடந்த 2006 ஆம் ஆண்டு கோதாவரி என்ற படத்தை இயக்க விரும்பி சித்தார்த்திடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அந்த கதையில் நடிக்க நிராகரித்து விட்டார்.

அதன் பின் மகேஷ் பாபுவை சந்திக்க எவ்வளவோ முயற்சித்தேன் ஆனால் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. பின்னர் அந்த காதல் கதை கதாபாத்திரத்தில் நடிகர் சுமந்த் நடித்து கொடுத்தார் என குறிப்பிட்டிருந்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.