நான் ஹீரோவா நடிக்கப் போறேனா? இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் விளக்கம்!
Tv9 Tamil July 08, 2025 07:48 PM

நடிகர் சசிகுமார் (Actor Sasikumar) நாயகனாக நடித்து இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Director Abishan Jeevinth) எழுதி இயக்கி இருந்தார். அவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு அறிமுக இயக்குநரின் படம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் இடையே பாராட்டைப் பெற்றது ஆச்சரித்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் நடிகர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியது மட்டும் இன்றி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். அந்த கதாப்பாத்திரம் படத்தின் முக்கிய திருப்புமுனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

திரையரங்குகளில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து டூரிஸ்ட் ஃபேமிலி படம் கடந்த ஜூன் மாதம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியானது. ஓடிடியில் வெளியான பிறகு தென்னிந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் டூரிஸ்ட் ஃபேமிலி தொடர்ந்து பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Also read… நோ ஃபேமிலி… நோ ஃப்ரண்ட்ஸ்… கூலி படத்திற்காக இரண்டு வருஷம் கடினமா உழைச்சிருக்கேன் – லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் நாயகனாகும் அபிஷன் ஜீவிந்த்:

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் வதந்திகள் பரவியது. இந்தப் படத்தை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்த் உடன் இணைந்து பணியாற்றிய உதவி இயக்குநர் இயக்க உள்ளதாகவும் இதில் பிரபல மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நாயகியாக நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் பரவியது.

இதுகுறித்து பேசிய இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தான் எந்தப் படத்திலும் நாயகனாக நடிக்கவில்லை என்றும், சினிமா வட்டாரங்களில் பரவிய செய்தி வந்தந்தி என்றும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் அவர் அடுத்தப் படத்தை பிரபல நடிகரை வைத்து இயக்க தயாராகி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது.

Also read… நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு பதிவு!

அபிஷன் ஜீவிந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Thank you @dhanushkraja sir, means a lot 🙂 pic.twitter.com/VIJTcFbRBh

— Abishan Jeevinth (@Abishanjeevinth)

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.