கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு - காட்டுவிளையில் வசித்து வரும் பெரியவர் சிதம்பர தாஸ். வறுமை சூழ்ந்த அந்த வீட்டில் துயரம் தோய்ந்த கண்களுடன் படுத்த படுக்கையாக கிடக்கிறார். அவருடன் உடனிக்கிறார் அஜிதா. பெற்று வளர்ந்த ஆசை மகன், நல்லபடியாக உயர்ந்து ஆளாகி, தங்களை பார்த்துக்கொள்வார் என எண்ணி ஏமாந்துள்ளனர்.அதனால் இந்த துயர நிலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
இவர்களின் ஒரே மகன் நிஷாந்த், கிரிக்கெட் விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தி வந்தார். டெல்லி, ராஜஸ்தான், நேபாளம் பகுதிகளில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். ஐ.பி.எல். போட்டியில் விளையாட வேண்டும் என்பதே அவரது ஆசை. இதனால் விடாமுயற்சியுடன் விளையாடி வந்த நிஷாந்த் அந்த வாய்ப்பு கிடைக்காமல் ஏமாந்து போனார். இதனால் விரக்தியில், 10 ஆண்டுகளுக்கு முன், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் நிஷாந்த்.
மகன் போன அதிர்ச்சியில், சுயநினைவை இழந்து படுத்த படுக்கையாகி விட்டார் தந்தை சிதம்பர தாஸ். அவருக்கான சிகிச்சைக்காக வாங்கிய கடன், கழுத்தை நெரிக்க, பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளார் நிஷாந்தின் தாய் அஜிதா. வேலையின்றி, வருமானமின்றி கணவரை கவனித்துக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார் அஜிதா.
தற்போது வீட்டின் அருகே உள்ள சிறிய உணவகத்தில் குறைவான மாத சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார். இந்த பணம் அன்றாட செலவுக்கே போதவில்லை. கணவருக்கு மருந்துகள் வாங்கவோ, கடனை அடைக்கவோ முடியாமல், மகனின் புகைப்படத்தையும் அவருடைய ஜெர்ஸியையும் வைத்துக் கொண்டு கண்ணில் ஏக்கத்துடன் நாட்களை கடத்தி வருகிறார் அஜிதா.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?