மாமல்லபுரம்: ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் ரமேஷ் புத்திஹால் வரலாறு படைத்துள்ளார். இந்தியர் ஒருவர் இந்த போட்டியில் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தனிநபர் பிரிவில் பங்கேற்ற ரமேஷ், 12.60 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்து வெண்கலத்தை கைப்பற்றினார். சர்ஃபிங் இந்தியாவில் இன்னும் வளர்ந்து வரும் விளையாட்டாக இருந்தாலும், சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் இந்தியாவின் முக்கிய சர்ஃபிங் மையங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த சாம்பியன்ஷிப், சர்ஃபிங் விளையாட்டை ஆசிய அளவில் பிரபலப்படுத்தும் முக்கிய நிகழ்வாகும்.