கதறும் மக்கள்... காசா பட்டினிச் சாவு எண்ணிக்கை 212 ஆக உயா்வு!
Dinamaalai August 10, 2025 06:48 PM

இஸ்ரேல் - காசா போர் நடவடிக்கைகள் தொடர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், காசாவில் மக்கள் கதறிக் கொண்டிருக்கின்றனர். ஒரு துண்டு ரொட்டிக்காக இன்னமும் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலை தான் நீடித்து வருகிறது. இஸ்ரேலின் முற்றுகையால் காசாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 212 ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் 11 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, உணவில்லாமல் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 212-ஆக உயா்ந்துள்ளது. இதில் சுமாா் 96 போ் சிறுவா்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் காசா மனிதாபிமான அறக்கட்டளை உணவு விநியோக மையத்தில் கூடியிருந்தவா்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 21 போ் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இத்துடன் காசாவில் கடந்த 2023 அக்டோபா் 7ம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதலில் இதுவரை 61,369 போ் உயிரிழந்தனா்; 1,52,850 போ் காயமடைந்தனா்.

காசாவின் முக்கிய நகரமான காசா சிட்டியைக் கைப்பற்றி, சுமாா் 10 லட்சம் பாலஸ்தீா்களை தெற்கு பகுதியில் தடுப்பு மண்டலங்களுக்கு வலுக்கட்டாயமாக இடமாற்ற இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஆனால் பல பாலஸ்தீா்கள் நகரை விட்டு வெளியேற மறுத்துள்ளனா்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.