பஸ் டூ ரயில் டிக்கெட்.. இனி அனைத்து ஒரே செயலியில்.. எப்போது அறிமுகம் தெரியுமா?
TV9 Tamil News August 16, 2025 08:48 PM

சென்னை, ஆகஸ்ட் 16 : சென்னையில் ஒரே டிக்கெட் முறையில் பயணம் செய்யும் வகையில், புதிய செயலியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் 2025 செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மக்கள் இந் செயலிக்காக நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், 2025 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மக்கள் பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி கொண்டிருக்கிறது. சென்னையில் முக்கிய போக்குவரத்தாக ரயில், மெட்ரோ ரயில், பேருந்து உள்ளது. மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்காக மின்சார ரயில், மெட்ரோ ரயில், பேருந்துகளை பயன்படுதத்தி வருகின்றனர்.

இந்த மூன்று போக்குவரத்துகளிலும் பயணம் மேற்கொள்ள வெவ்வேறு டிக்கெட்டுகள் வாங்கி வருகின்றனர். இதனால், மக்களுக்கு சிரமமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு, அனைத்து விதமான போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வகையில், ஒரு செயலியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. இது அறிமுகமாகும் பட்சத்தில்,  அனைத்து போக்குவரத்து டிக்கெட்டுகளையும் ஒரே செயலி மூலம் புக் செய்து கொள்ள முடியும்.

Also Read : பஸ் டிக்கெட் டூ ரேஷன் கார்டு.. வாட்ஸ் அப் வழியாகவே ஈஸியா பண்ணலாம்.. தமிழக அரசு அறிவிப்பு

ஒருங்கிணைந்த டிக்கெட் செயலி

சென்னை மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் என அனைத்திலும் பயணிக்கும் வகையில் ஒரே டிக்கெட்டை பெறுவதற்கான புதிய செயலியை CUMTA 2025 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. ஏற்கனவே, 2025 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என தகவல் வெளியான நிலையில், தற்போது அது தள்ளிவைக்கப்பட்டு, 2025 செப்டம்பர் மாதம் வெளியிடப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

பொது போக்குவரத்து மட்டும் இல்லாமல், வாடகை ஆட்டோ, கார்களுக்கு இந்த செயலி பொருந்தும். உதாரணமாக நந்தனித்தில் இருந்து விஆர் மால் வரை செல்ல விரும்பும் பயணி, செயலி மூலமே பயணத்தை திட்டமிடலாம். அதாவது, செயலியில் தொடக்க மற்றும் இறுதியில் செல்லப்போகும் இடங்களை உள்ளீட்டால், சிறப்பு வழித்தடத்தி அந்த செயலி காட்டும்.

இதன் மூலம் நாம் கோயம்பேடு சென்று, அங்கிருந்து நம்ம யாத்ரி ஆட்டோவில் மாலுக்கு செல்லலாம். இப்படியான இந்த செயலி செயல்படும். ஜிபிஎஸ் கருவி மூலம் கோயம்பேட்டில் இறங்கியதும், ஆட்டோ தானாகவே முன்பதிவு செய்யப்படும். ஆட்டோவிற்கு கட்டணம் தனியாக செலுத்த வேண்டியிருக்கும்.

Also Read : சென்னையில் 2024-ல் மட்டும் 20,000 நாய்க்கடி சம்பவங்கள்.. நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்!

ரூ.8.75 கோடி மதிப்பில் உருவாகும் இந்த திட்டத்தை நம்ம யாத்ரியுடன் முதல்கட்டமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, சிஎம்ஆர்எல் மற்றும் என்டிசியிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக எம்ஆர்டிஎஸ் இடமும், தெற்கு ரயில்வேயுடனும் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த பணிகள் முடியும் தருவாயில் இருக்கும் நிலையில், 2025 செப்டம்பர் மாதம் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.