War 2 boxoffice: வசூலில் எகிறிய வார் 2 ! இரண்டே நாளில் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
CineReporters Tamil August 16, 2025 08:48 PM

War 2 boxoffice: கூலி திரைப்படம் ரிலீஸ் ஆன அதே நாளில் தான் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வார் 2 திரைப்படமும் ரிலீஸ் ஆனது. அயன் முகர்ஜி இயக்கத்தில் கிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வார் 2 .இந்த படத்தில் கியாரா அத்வானி முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதன் முதல் பாகம் ஏற்கனவே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அதனால் இதன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்திருந்தனர். டிக்கெட் விற்பனையில் மோசமான தொடக்கத்தையே பெற்ற இந்த திரைப்படம் தற்போது வசூலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கண்டுள்ளது. அதன் இரண்டாவது நாளில் அதாவது சுதந்திர தின விடுமுறை காரணமாக வசூலில் ஆரோக்கியமான உயர்வை கொண்டுள்ளது. இந்த திரைப்படம் அனைத்து மொழிகளிலும் இரண்டாவது நாளில் கிட்டத்தட்ட 56.5 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதன் முதல் நாள் வசூல் ஆன 51.5 கோடியிலிருந்து இது 10% வளர்ச்சியை கொண்டிருக்கின்றது. முதல் நாளில் ஹிந்தியில் மட்டும் 29 கோடி தெலுங்கில் 22.25 கோடி மற்றும் தமிழில் 0.25 கோடி என்ற அளவில் வசூலை பெற்றது. இதன் மூலம் படம் வெளியான இரண்டு நாட்களில் 100 கோடி மைல்கல்லை இந்த படம் தாண்டியுள்ளது. அதைப்போல இரண்டாம் நாளில் இந்தியில் மட்டும் ஒட்டுமொத்தமாக இந்த படம் 51.5 2% விகிதத்தை எட்டியுள்ளது .

அதனால் 40 கோடி ஹிந்தியில் மட்டும் இந்த படம் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. நாளுக்கு நாள் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு இருந்து கொண்டே வருகின்றன. ஹிந்தியை விட தெலுங்கில் தான் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஜூனியர் என்டிஆரின் மிகப்பெரிய ரசிகர்களின் பின் தொடர்களால் தான் இந்த அளவு அதிகரித்திருப்பதாக தெரிகிறது. இன்னும் சனி, ஞாயிறு இரண்டு தினம் விடுமுறை என்பதால் இதனுடைய வசூலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.