தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் காலை முதலே அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே சோதனை நடைபெறுகிறது.
அதாவது சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லம், திண்டுக்கல்லில் உள்ள அவரது வீடு, எம்எல்ஏ விடுதி, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
மேலும் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த அமலாக்க துறையினர் முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.