காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… எங்கெங்கு தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
TV9 Tamil News August 22, 2025 12:48 AM

சென்னை, ஆகஸ்ட் 21 :  தமிழகம் முழுவதும் நகரப்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் (CM Breakfast Scheme) விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னையில் 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin) தொடங்கி வைக்க உள்ளார். காலை உணவு திட்ட விரிவாக்கத்தின் மூலம் 3.05 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.   தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த நேரத்தில், தமிழகத்தில் 2022ஆம் தேதி செப்டம்பர் மாதத்தில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 இந்த திட்டம் மூலம் மாணவர்களுக்கு தினமும் பள்ளியில் காலை உணவு வழங்கப்படுகிறது. பொங்கல்,  உப்புமா, இட்லி,   ராகி உப்புமா, கம்பி சேமியா, கோதுமை ரவா உள்ளிட்ட உணவுகள்  காலை உணவாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்த திட்டத்தை பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து, படிப்படியாக காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை கிராமப்புறங்களில்  உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும்  பள்ளிகளில் மட்டும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

Also Read : ”ரெய்டு என்றதும் கூட்டணியில் சேர நாங்கள் என்ன பழனிசாமியா” – முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்..

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3 இலட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் 26.8.2025 அன்று
(1/2) pic.twitter.com/u8DSTVWDIP

— TN DIPR (@TNDIPRNEWS)

இந்த நிலையில், தற்போது நகரப்புறங்களில் உள்ள பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னையில் 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 3 லட்சம் மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என 2025 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.

Also Read : முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு.. நன்றி சொன்ன தூய்மை பணியாளர்கள்!

அதன்படி, தமிழக முதல்வர் ஸ்டாலின், நகர்ப் பகுதியில் உள்ள அனைத்து உதவி பெறும் தொடக்க பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் விரிவாக்கம் மூலம் 3.05 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.