பாராளுமன்ற வளாகத்தில் அத்து மீறி நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் அத்துமீறி மர்ம நபர்கள் நுழைவதைத் தடுப்பதற்காக 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை 6 மணிக்கு மர்ம நபர் ஒருவர் பாராளுமன்ற வளாக சுற்றுச்சுவர் ஓரம் இருந்த மரத்தின் மீது ஏறி சுவரை தாண்டி உள்ளே குதித்தார்.
இதை பார்த்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உடனடியாக அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் வந்ததற்கான நோக்கம் என்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பாராளுமன்ற வளாக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.