பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவர்… நெல்லையில் பரபரப்பு… அதிர்ச்சி காரணம்
TV9 Tamil News August 23, 2025 02:48 AM

திருநெல்வேலி, ஆகஸ்ட் 22 : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் புத்தகப் பையில் பள்ளி மாணவன் கத்தியை பள்ளிக்கு எடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக மாணவனுடன் தகராறு இருப்பதால், கத்தியை பள்ளிக்கு எடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். சமீப காலங்களில் பள்ளி மாணவர்களிடையே மோதல்கள் அதிகளவில் நடந்து வருகிறது. குறிப்பாக, மாணவர்கள் ஒருவரைக்கொருவர் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்கி வருகின்றனர். படிக்கும் வயதில் பள்ளி மாணவர்கள் ஆயுதங்களை கையில் தூக்குவது அனைவரிடையே கவலையை எழுப்பி உள்ளது. இதனை அடுக்க பள்ளிக்கல்வித்துறை கடும் நடவடிக்கை எடுத்த வருகிறது. மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, அவர்களது பைகளை சோதனையிடுவும் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், ஆசிரியர்களுக்கு தெரியாமல் பைகளில் கத்தி போன்ற ஆயுதங்களை மாணவர்கள் எடுத்து வருகின்றனர். இதனால், பள்ளிகளில் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், திருநெல்வேலியில் உள்ள ஒரு பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் புத்தகப் பையில் பள்ளி மாணவன் கத்தியை பள்ளிக்கு எடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : ரூ.30,000-க்கு பெண் சிசுக் கொலை… சிக்கிய மருத்துவர்.. திருப்பத்தூரை அதிர வைத்த சம்பவம்!

பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவர்

திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதியான நேற்று வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது, அங்கு படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தனது புத்தகப் பையில் புத்தகங்களுக்கு நடுவே கத்தியை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் ஒருவருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் அவர் தெரிவித்தார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் திசையன்விலை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 9ஆம் வகுப்பு மாணவை பிடித்து, விசரரணை நடத்தி கத்தியை பறிமுதல் செய்தனர்.

Also Read : நடுங்கிய சேலம்.. தந்தை, சித்தியை கொன்ற மகன்.. துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்!

விசாரணையில் அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது. அதாவது, 9ஆம் வகுப்பு மாணவை, அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவன் முன்பு கத்தியை காட்டி மிரட்டியதாகவும், இதனால் தன்னை எதாவது அந்த மாணவர் செய்து விடுவானோ என்ற பயத்தில் கத்தியை பள்ளிக்கு மறைத்து எடுத்து வந்ததாக கூறினார். இதனை கேட்ட போலீசார், மாணவனை எச்சரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பள்ளிக்கு புத்தகப் பையில் கத்தியை மறைத்து வைத்து எடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.