தமிழகத்தில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்களில் பூஜை நேரங்கள் மாற்றம்!
Dinamaalai September 07, 2025 02:48 PM

இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பிரபலமான கோவில்களில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. இன்றிரவு அரிய வகை முழு சந்திர கிரகணம் நிகழ உள்ள நிலையில், இது 82 நிமிடங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகணம், சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் ஏற்படுகிறது.


 இந்நிகழ்வின் போது, சந்திரன் அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும். இன்றிரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இது நள்ளிரவு 12.23 வரை நீடிக்கும். இந்த முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். வானம் தெளிவாக இருந்தால், இந்த அரிய நிகழ்வை பொதுமக்கள் முழுமையாக கண்டு ரசிக்கலாம்.

இந்நிலையில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை செப்.7 ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெற்ற பின்னர் நடை திருகாப்பிடப்படுகிறது. அன்றைய தினம் கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் தரிசன வரிசை மற்றும் பொது தரிசன வரிசை நுழைவு பகுதியில் மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

இரவு 9:47 முதல் நள்ளிரவு 1.23 வரை சந்திர கிரகத்தை முன்னிட்டு இரவு ஏழு மணிக்கு அனைத்து கோவில்களும் நடை சாத்தப்படுகிறது மீண்டும் நாளை அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பரிகாரங்கள் செய்யப்பட்டு கோவில்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தூத்துக்குடி சிவன் கோவிலில் இரவு 7 மணிக்கு நடை சாத்தப்படுகிறது மீண்டும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.